துருக்கிக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைனில்(Ukraine) போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவுடனான(Russia) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க துருக்கி(Turkey) செல்ல திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க தயாராகி வருகிறோம் என்றும் போரை விரைவில் முடிவிற்கு கொண்டுவர உறுதியாக உள்ளோம் என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை மாதம் இஸ்தான்புல்லில்(Istanbul) சந்தித்ததிலிருந்து கிய்வ்(Kyiv) மற்றும் மாஸ்கோ(Moscow) இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை.
இதற்கு முன்னதாக உக்ரைனும் ரஷ்யாவும் இஸ்தான்புல்லில் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன, இது ஆயிரக்கணக்கான போர்க் கைதிகள் மற்றும் இறந்த வீரர்களின் உடல்களை பரிமாறிக் கொள்ள வழிவகுத்தது.
(Visited 2 times, 4 visits today)




