மக்கள் AI கருவிகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது – சுந்தர் பிச்சை வலியுறுத்தல்!
மக்கள் AI கருவிகள் சொல்லும் அனைத்தையும் “கண்மூடித்தனமாக நம்பக்கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் (Alphabet) தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பிபிசி ஊடகத்திற்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
AI மாதிரிகள் “பிழைகளுக்கு ஆளாகின்றன” என்றும், மற்ற கருவிகளுடன் சேர்த்து அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, வளமான தகவல் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால்தான் மக்கள் கூகுள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள் எனக் கூறிய அவர், துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக அடித்தளம் கொண்ட பிற தயாரிப்புகள் எங்களிடம் உள்ளன எனவும் கூறியுள்ளார்.
நீங்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக எழுத விரும்பினால்” AI கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் “இந்த கருவிகளை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





