ட்ரம்பின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் ஏற்றுமதியை அதிகரித்த இந்தியா!
கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை இந்தியா அதிகரித்துள்ளது.
ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5% அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் மருந்துகள் போன்ற வரி விலக்கு பெற்ற துறைகள் இந்த ஐந்து மாதங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இது ஒரு தற்காலிக அனுமானமாகவே உள்ளது என்று டெல்லியை தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த மே தொடக்கம் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவின் ஏற்றுமதியானது 28.4% குறைந்துள்ளது.
மாதாந்திர ஏற்றுமதி மதிப்பில் $2.5 பில்லியனுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





