ட்ரம்பின் காசா சமாதானத் திட்டத்திற்கு ஐ.நா அங்கீகாரம் – ஹமாஸ் நிராகரிப்பு
காசாவில் அமைதி நிலையை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கிய 20 அம்சத் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அங்கீகரித்துள்ளது.
இது தொடர்பான பிரேரணை நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது 13 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.
சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ட்ரம்ப்பின் சமாதானத் திட்டத்தில் சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையொன்றை ஸ்தாபிக்கும் யோசனையும் உள்ளடங்கியுள்ளது.
இதேவேளை, ஐ. நா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.
இது பலஸ்தீனர்களது உரிமைகளையும் கோரிக்கைகளையும் நிலைநாட்டவில்லை என ஹமாஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சமாதான உடன்படிக்கை தற்போது காசாவில் நடைமுறையில் உள்ளது.
கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால், இடம்பெயர்ந்து வாழும் பெருமளவான மக்கள் தமது இருப்பிடங்களை நாடி வருகின்றனர்.
அதேவேளை போரினால் தரைமட்டமாகியுள்ள கட்டட சிதைவுகளை அகற்றும் பணியும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





