பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு!
பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுவிட்டது. அது தற்போது மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றது. அப்பணி முடிந்த பின்னர் மக்களிடம் கருத்து பெறப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பரிந்துரை அறிக்கை தமிழ் மற்றும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
வெகுவிரைவில் புதிய சட்டம் தொடர்பில் மக்கள் கருத்துகள் பெறப்படும். அந்த வகையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.





