கரீபியன் கடலை வந்தடைந்த அமெரிக்காவின் விமானந்தாங்கி போர் கப்பல்!
அமெரிக்காவின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (Gerald R. Ford) விமானம் தாங்கிக் கப்பல் கரீபியன் கடலை வந்தடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 12,000 துருப்புக்களையும் , விமானங்களையும் உள்ளடக்கிய இந்த கப்பல் கரீபியன் கடற்பகுதிக்கு வருகை தந்துள்ளதன் மூலம் அமெரிக்காவின் பிரச்சனம் அப்பகுதியில் அதிகரித்து வருவதை புலப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்ரேஷன் சதர்ன் ஸ்பியர்’ (Operation Southern Spear) இன் ஒரு பகுதியாக குறித்த கப்பல் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது வெனிசுலாவில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான நடவடிக்கையாக விவரிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் படகுகள் மீதான சமீபத்திய தாக்குதல்களை அமெரிக்கா நியாயப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
வெளிப்படையாக போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையாக காண்பிக்கப்பட்டாலும் மறைமுகமாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் பிராந்தியத் தலைவர்கள் மற்றும் மனித உரிமை அதிகாரிகளிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன.
வெனிசுலாவிற்குள் நில இலக்குகளைத் தாக்க ஃபோர்டின் போர் விமானங்கள் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வியையும் நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். எவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பிராந்திய மோதலை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





