பாலியல் குற்றவாளியால் ட்ரம்பிற்குச் சிக்கல் – குடியரசுக் கட்சிக்குள் பிளவு
அமெரிக்காவில் பாலியல் குற்றவாளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் அவருக்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
குடியரசுக் கட்சியில் ட்ரம்புடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜரி டெய்லர் கிரீனுடன் ((Marjorie Taylor Greene)) இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் போது மார்ஜரி டெய்லருக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் குடியரசுக் கட்சிக்குள் உள்ளக மோதல்கள் தீவிரம் அடைந்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டெயின் தொடர்பான தகவல்கள் வெளியான நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், பாலியல் சர்ச்சை தொடர்பான ஆவணங்களை மறைக்கும் செயற்பாட்டிற்கு, டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு வழங்கியதாக, மார்ஜரி டெய்லர் குற்றம் சாட்டியிருந்தார். இதன்மூலம் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் மற்றும் மார்ஜரி டெய்லர் ஆகியோருக்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு இடைத்தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





