வெனிசுலா எல்லையில் அமெரிக்கப் போர்க்கப்பல் – கரீபியன் கடலில் தீவிரமடையும் பதற்றம்
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்டு ஆர். போர்ட் (USS Gerald R. Ford) கரீபியன் கடல் பகுதியில் முகாமிட்டிருப்பது அப்பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வெனிசுலாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெனிசுலாவில் இருந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாகக் கூறி, கரீபியன் கடல் பகுதியில் செல்லும் படகுகளைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட 20 தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வெனிசுலாவில் இருந்து வெறும் 7 மைல்கள் தொலைவில் உள்ள டிரினிடாட் மற்றும் டொபாக்கோவில் அமெரிக்கத் துருப்புகள் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது வெனிசுலாவைச் சுற்றியுள்ள இராணுவ அழுத்தத்தை மேலும் அதிகரித்துள்ளது.





