பங்களாதேஷின் முன்னாள் பிரதமருக்கு மரண தண்டனை? தீவிர பாதுகாப்பில் நாடு
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனாவிற்கு எதிரான வழக்கில் அந்நாட்டின் சிறப்பு தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அதற்கமைய, பங்களாதேஷில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கலவரம் செய்யும் நோக்குடன் செயல்படுபவர்களை கண்டதும் சுடுவதற்கு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்தாண்டு ஜூலையில் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதனால், உயிருக்கு பயந்து ஷேக்ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையில் அமைந்த இடைக்கால அரசு, இந்த போராட்ட வழக்கில் சிறப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தி வருகிறது.
அதில், ஷேக்ஹசீனாவிற்கு தூக்கு தண்டனை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. இச்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, ஷேக் ஹசீனாவுக்கு இன்று சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதிக்கக்கூடும் என்று ஷேக் ஹசீனாவின் மகன் சஜிப் வாஸீத் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் இருந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





