இலங்கையில் பொழியும் விண்கல் மழை!! மக்களுக்கு அரிய வாய்ப்பு!
இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய விண்கல் மழையை இன்று (16) நள்ளிரவு மற்றும் நாளை அதிகாலையில் காணலாம் என்று வானியலாளரும் மூத்த விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
லியோனிட் விண்கல் பொழிவை (Leonid meteor shower) மக்கள் காணலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி வர 33 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் . இதன்போது உடைந்த ஆஸ்ட்ராய்டுகளின் ( broken astroids) துண்டுகள் மற்றும் மீதமுள்ள வால் நட்சத்திரத் துகள்கள் அண்டவெளியில் விட்டுச் செல்லும். இவையே விண்மீன் மழையாக பொழிகிறது.
மூத்த விரிவுரையாளர் கிஹான் வீரசேகர, நாளை அதிகாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை விண்கல் பொழிவை மிகத் தெளிவாகக் காணலாம் என்று குறிப்பிட்டார்.
இந்த விண்கல் மழையின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த தூசி துகள்கள் ஒப்பீட்டளவில் அதிக வேகத்தில் பயணிக்கின்றன. வளிமண்டலத்துடனான இந்த அதிவேக தொடர்பு காரணமாக, விண்கற்கள் பிரகாசமாகத் தோன்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





