உறுதியானது மாகாணசபைத் தேர்தல்: விசேட தெரிவுக்குழு அமைப்பு!
மாகாணசபைத் தேர்தல் மற்றும் அது நடத்தப்படும் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவுள்ளது என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தின்போது துறைசார் அமைச்சரால் மேற்படி யோசனை முன்வைக்கப்படும்.
இதற்கமைய தெரிவுக்குழு அமைக்கப்பட்டு தேர்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை அமைக்குமாறு எதிரணி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.
அத்துடன், மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என பாதீட்டு உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே தெரிவுக்குழு அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.





