சீனாவில் காதலியின் பெற்றோரின் விருப்பத்தைப் பெற உயிரை விட்ட காதலன்
சீனாவில் காதலியின் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்த விரும்பிய காதலன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹென்னான் (Henan) மாகாணத்தைச் சேர்ந்த 36 வயதான லீ ஜியாங் (Li Jiang) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது காதலியின் பெற்றோரின் மனதில் இடம்பிடிக்க மெலிந்த தோற்றத்தைப் பெறும் நோக்கில், உடல் எடை குறைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார்.
134 கிலோ எடை கொண்ட லீ ஜியாங், தனது எடையைக் குறைக்கும் நோக்கில் கடந்த இரண்டாம் திகதி அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இரண்டு நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இரண்டு நாட்களின் பின்னர் அவரது உடல்நிலை திடீரென்று மோசமடைந்து, மூச்சுவிடச் சிரமம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் லீ ஜியாங் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அறுவைச் சிகிச்சை முறை மூலமான எடை குறைப்பு ஆபத்தானது என்றும், இயற்கையான முறையில் அதனை குறைக்க முயற்சிக்க வேண்டும் எனவும் பலர் தெரிவித்துள்ளனர்.





