சினிமா பாணியில் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை கொலை செய்ய முயற்சி!
பாதாள உலகக் குழுக்கள் சிறைச்சாலையில் இருக்கும் தங்கள் எதிரிகளைக் கொல்ல முயற்சிப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இந்த கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தரைக்கு அருகில் உள்ள தேவுந்தர விஷ்ணு கோயில் அருகே சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரன் குறித்த சிறைச்சாலையில் இருக்கின்ற நிலையில் அவரை கொலை செய்ய இரண்டு கைதிகள் முயற்சித்துள்ளனர்.
இதில் ஒரு கைதி காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு இளைஞர்களின் கொலையும் தெஹிபலே என்ற குற்றவாளியால் திட்டமிடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் இந்த கொலை முயற்சியையும் திட்டமிட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
சிறையில் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் அலுமினியத் தட்டில் இருந்து வடிவமைக்கப்பட்ட கூர்மையான ஆயுதத்தால் கைதிகள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கைதிகளும் தற்போது தனித்தனி அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.





