இந்தோனேசியாவில் வேன் விபத்து – சீன சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பாலியில் நடந்த வேன் விபத்தில் ஐந்து சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் பாதுகாப்புப் படையினரின் விசாரணையில், வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததால் விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பாக வேனின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னெடுது்து வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)





