தொழிலுக்காக இஸ்ரேல் சென்ற இளைஞர் மர்மமான முறையில் மரணம்!
இஸ்ரேலில் பணிப்புரிந்து வந்த இலங்கை பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியை சொந்த இடமாக கொண்ட 38 வயதான இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானத் தொழிலாளராக இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் வேலை வாய்ப்பின் பேரில் அவர் இஸ்ரேல் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் குறித்து இஸ்ரேல் காவல்துறையின் இன்டர்போல் கிளை தற்போது விசாரித்து வருவதாகவும் நிமல் பண்டார மேலும் கூறியுள்ளார்.
(Visited 5 times, 5 visits today)





