அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவில் புதிய விசா அறிமுகம் – இலகுவாக சீனா செல்ல வாய்ப்பு
வெளிநாட்டு நிபுணர்களை ஈர்க்கும் வகையில் கே-விசா (K-Visa) என்ற புதிய திட்டத்தை சீன அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI), செமி-கண்டக்டர், ரோபோ தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளை சேர்ந்தவர்களுக்கு இந்த விசா வழங்கப்படவுள்ளது.
அமெரிக்காவில் H-1B விசா கட்டண உயர்வால் அங்கு செல்ல முடியாதவர்களை தம் பக்கம் ஈர்க்கும் வகையில் சீனா இந்த நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
கே-விசாவை பெற வேலைவாய்ப்பு உறுதி கடிதம் இல்லாமல் கூட விண்ணப்பிக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
சீனாவின் இந்த அதிரடி அறிவிப்பு காரணமாக இந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள், அந்த விசாவை பெற அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதேவேளை சீனாவிலுள்ள கட்டுப்பாடுகள், சலுகைகள் உட்பட பல்வேறு வசதிகளை கருத்திற் கொண்டு சில தரப்பினர் இந்த விசா நடைமுறை பொருத்தமற்றது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





