உலகம் செய்தி

பாகிஸ்தான் தற்கொலை குண்டு தாக்குதல் – ஆப்கானிஸ்தான் மீது குற்றச்சாட்டு!

பாகிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானே காரணம் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து குற்றம் சாட்டியுள்ள  பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி (Mohsin Naqvi),  “இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்” என்று எந்தவொரு ஆதாரத்தையும் வழங்காமல்  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆப்கானிஸ்தான்  எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் தலைநகரைத் தாக்கிய முதல் தாக்குதலான இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபானின் ஒரு பிரிவு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!