இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பில் ஜனாதிபதி விடுத்த உத்தரவு
தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் தற்போதுள்ள தேக்கத்தை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஆட்பதிவு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
டிஜிட்டல் அடையாள அட்டை வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அவர் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சின் முன்னேற்ற பரிசீலனை கூட்டத்தில் உரையாற்றினார். அமைச்சின் வளாகத்தில் கூட்டம் இடம்பெற்றது.
அதன் நிர்வாக மற்றும் செயற்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.
புதிய டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையை ஸ்தாபித்தல், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு தேவையான பௌதீக மற்றும் ஆளணி வளங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் நேற்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன.
(Visited 4 times, 4 visits today)





