“கும்கி – 2” பட ரிலீசுக்கு அதிரடியாக தடை விதிப்பு
பிரபுசாலமன் இயக்கத்தில் 2012ல் வெளியாகி பெரிய ஹிட் ஆன படம் கும்கி. அதன் இரண்டாம் பாகத்தை தற்போது பிரபு சாலமன் இயக்கி நவம்பர் 14ம் திகதி ரிலீஜூக்கு தயாராக உள்ளது.
ஆனால் தற்போது நீதிமன்றம் கும்கி பட ரிலீசுக்கு அதிரடியாக தடை விதித்து இருக்கிறது.
2018ல் கும்கி 2 படத்தை தயாரிக்க 1 கோடி 50 லட்சம் ரூபாயை சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவரிடம் பிரபு சாலமன் கடனாக வாங்கி இருக்கிறார்.
அந்த தொகையை படத்தின் ரிலீசுக்கு முன்பு செட்டில் செய்வதாக ஒப்பந்தம் செய்திருந்தாராம்.
வட்டி உடன் சேர்த்து தற்போது 2.5 கோடி ரூபாயை அவர் செலுத்தாக நிலையில் தற்போது கும்கி 2 ரிலீசுக்கு தடை கேட்டு சந்திரபிரகாஷ் ஜெயின் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கும்கி 2 ரிலீசுக்கு இடைக்கால தடை விதித்து இருக்கிறார்.
கும்கி படத்தை எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் இந்த தடை உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






