இந்தியாவை உலுக்கிய கோர ரயில் விபத்து – இதுவரை 207 பேர் பலி
இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 200இற்கும் அதிகமாார் உயிரிழந்துள்ளர். சம்பத்தில் 900இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ரயில் விபத்தினால் இதுவரை 207இற்கும் அதிகமான உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதகவும் அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரயில் ஒடிஸா மாநிலத்தில் பாலாசூர் பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த ரயிலோடு நேருக்கு நேர் மோதியமை விபத்துக்கான காரணமாகும்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா பத்து இலட்சம் ரூபா இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாகவும் சிறு காயத்திற்குள்ளானவர்களுக்கு 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படும் என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.