“அரோராவுடன் நெருக்கமாக இருந்தேன்” எலிமினேஷனுக்கு பிறகு மனம் திறந்த துஷார்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி 35 நாட்களை கடந்து விட்டது.
இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆதரவு தருவதை விட எதிர்ப்புகள் தான் அதிகம். பல ரிய போட்டியாளர்களை இறக்கியதுதான் காரணம்.
ஒருமுறையும் இல்லாதவாறு இம்முறை பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரி போராட்டமும் இடம்பெற்றது.
என்ன தான் விமர்சனங்கள் வந்தாலும், இதற்கு மத்தியில் பிக்பாஸிற்கு என்று தனி ஆடியன்ஸும் இருக்கின்றனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட்டான துஷார் நேர்காணல் ஒன்றில் பிக்பாஸ் வீடு குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,
“அரோரா எனக்கு மிகவும் நெருக்கமான தோழி. நான், அரோரா, வியானா எல்லோரும் ஒரே வயது என்பதால் சீக்கிரம் நண்பர்களாகிவிட்டோம். சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருவரும் இருந்த போது கொஞ்சம் நெருக்கமானோம். அதன்பின்னர், நான் மனம் உடைந்த போது அரோரா மட்டும் தான் தோள் கொடுத்து நான் பேசுவதை கேட்டார். இதை காதல் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். காதல் என்ற இன்டன்சனோடு நாங்கள் பேசவில்லை” என்றார்.
ஆனால் இது அவர் மட்டும் கூறும் காரணம் தான். வெளியில் இருந்து பார்த்த ஆடியன்ஸூக்கு தெரியும் இவர்கள் என்னவெல்லாம் கதைத்தார்கள், என்னவெல்லம் செய்தார்கள் என்று…






