இலங்கை

இலங்கையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகும் மருத்துவவர்கள்

இலங்கையில் நவம்பர் 17ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் மருத்துவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதன் மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த முடிவு இடம்பெற்றுள்ளது.

அதற்கமைய, சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளுக்கு வெளியே எடுத்துச் செல்ல வேண்டிய மருந்துகளுக்கான மருந்துச் சீட்டுகளை வழங்குவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எதிர்பார்த்தபடி அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகள் வழங்கத் தவறியதால், இது தொடர்பாக எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்துச் சிறப்பு மருத்துவர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாகச் சிறப்பு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!