எகிப்தில் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து விபத்து – இருவர் பலி!
எகிப்தில் சுற்றுலா பேருந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
செங்கடல் கடற்கரையில் உள்ள ஹுர்காடா (Hurghada) அருகே இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 36 பேர் காயமடைந்துள்ளதாக டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களில் ஒருவர் பேருந்தின் ஓட்டுநர் எனவும், மற்றையவர் ரஷ்ய பயணி என்றும் தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரம் காயமடைந்தவர்கள் ராஸ் கரேப்பில் ( Ras Ghareb) உள்ள ஒரு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணகைளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)





