நுகேகொடை பேரணி புறக்கணிப்பு? ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு
நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதென உள்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள இப்பேரணியில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் எடுத்துள்ளது.
இது பற்றி ஏற்பாட்டாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், பேரணியில் பங்கேற்க வேண்டுமெனவும், கட்சி முடிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது விடயத்தில் ஐக்கிய மக்கள் சக்தி விட்டுக்கொடுப்பு செய்தால், ஏனைய எதிரணிகள் தலைதூக்கக்கூடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனநாயகத்துக்காகவும், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தி இடம்பெறவுள்ள இப்பேரணிக்கு பிரதான எதிர்க்கட்சியே தலைமைத்துவம் வகிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சார்ப்பு தொழிற்சங்க உறுப்பினர்கள் சிலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.





