சீனாவில் திருமணத்தை ஊக்குவிக்க நள்ளிரவில் நடக்கும் களியாட்டம்
சீனாவில் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நகர சபை ஒன்று அறிவித்துள்ளது.
ஷாங்காய் (Shanghai) நகரத்தில் இரவு நேரத்தில் களியாட்ட விடுதிகளில் திருமணம் செய்து வைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக பதிவு செய்யும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த மாதத்தின் இரண்டு வாரங்களில் மட்டும் இந்த சிறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய INS Land எனும் பிரபல இரவு விடுதியுடன் இணைந்து நகர சபை அதிகாரிகள் இந்தச் சிறப்புச் சேவையை வழங்கவுள்ளனர்.
களியாட்ட விடுதியில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதுடன் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இவ்வாறான திருமணங்கள் மூலம் இளைஞர்களின் திருமண வீதம் அதிகரிப்பதுடன், இரவு நேர களியாட்ட விடுதிகளும் பிரபலம் அடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவாகவும் எதிராகவும் மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
சில தரப்பினர் களியாட்ட விடுதியில் திருமணம் செய்வதை வரவேற்றுள்ளதுடன், மற்றுமொரு தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





