அமெரிக்காவில் அனைவருக்கும் தலா 2,000 டொலர் – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தலா 2,000 டொலர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பின் (Reciprocal Tax) மூலம் கிடைக்கும் பணத்தில், அதிக வருமானம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு இது கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவலை அவர் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைத்தளப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
தமது அரசு அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையால், அமெரிக்கா பணவீக்கம் இல்லாத நாடாகவும், உலகின் பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாகவும் மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்புக் கொள்கையை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள் என ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
பரஸ்பர வரி விதிப்பின் மூலம் அமெரிக்காவுக்கு டிரில்லியன் கணக்கில் வருமானம் கிடைப்பதாகவும், விரைவில் தனது ஒட்டுமொத்த கடனில் 37 டிரில்லியன் டொலரை அமெரிக்கா அடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவில் சாதனை அளவில் முதலீடுகள் குவிந்து வருவதாகவும், ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.





