ஐரோப்பா

பாரபட்சக் குற்றச்சாட்டுகள் – BBC நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் பதவி விலகல்

பிரித்தானியாவை தலைமையிடமாகக் கொண்ட BBC செய்தி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செய்திப் பிரிவுத் தலைமை அதிகாரி ஆகிய இருவரும் பதவி விலகியுள்ளனர்.

தங்கள் செய்தி வெளியீட்டில் பாரபட்சம் காட்டுவதாகத் தொடர்ந்து வந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், அவர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.

BBCயின் நடுநிலைமை குறித்து எழுந்த விமர்சனங்களே இந்த நிர்வாக மாற்றங்களுக்கு முக்கியக் காரணம் ஆகும் எனக் கூறப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2021 ஆம் ஆண்டில் பேசியதன் இரண்டு வேறுபட்ட பகுதிகளை ஒன்றாகத் தொகுத்து, அவர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக BBC வெளியிட்டது முக்கிய முறைப்பாடாக இருந்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்த செய்திகளில் BBC பாரபட்சமாக நடந்துகொண்டதாக, நிறுவனத்தின் முன்னாள் தரநிலை ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் டெய்லி டெலிகிராப் (Daily Telegraph) பத்திரிகையிடம் தகவல்களைக் கசியவிட்ட பிறகு, BBC மீதான நெருக்கடி மேலும் அதிகரித்தது.

மேலும், BBC ஒரு பிரசார இயந்திரம் போலச் செயல்படுவதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தது.

நிர்வாக இயக்குநர் டிம் டேவி (Tim Davie) 2020 ஆம் ஆண்டு முதல் பொறுப்பில் இருந்தார்.

செய்திப் பிரிவுத் தலைமை நிர்வாக அதிகாரி டபோரா டர்னஸ் (Deborah Turness) என்பவரும் பதவி விலகியவர்களில் ஒருவர் ஆவார்.

(Visited 4 times, 5 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!