UKவில் ஆதரவு கொடுப்பனவை கோரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரித்தானியாவில் வேலை செய்யாமலோ அல்லது படிக்காமலோ இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தொடர்பில் சுயாதீன மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய முன்னாள் சுகாதார செயலாளர் ஆலன் மில்பர்ன் (Alan Milburn) இந்த பணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 -24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் கல்வி அல்லது வேலையில் இருந்து வெளியேறுவது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் பாட் மெக்ஃபேடன் (Pat McFadden) வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் UC சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆதரவு கொடுப்பனவைப் பெற விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை 50% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை தெரிவித்துள்ளது.
சுமார் 80% இளைஞர்கள் தற்போது மனநலக் காரணங்களையோ அல்லது நரம்பியல் வளர்ச்சி நிலையையோ காரணங்களாக கூறி குறித்த ஆதரவு கொடுப்பனவை பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே புதிய மதிப்பாய்வை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.





