உகாண்டாவில் காணாமல் போன கென்ய ஆர்வலர்கள் பாதுகாப்பாக மீட்பு
ஐந்து வாரங்களுக்கு முன்பு உகாண்டாவில்(Uganda) காணாமல் போன இரண்டு ஆர்வலர்கள் உயிருடன் திரும்பி வந்ததாக கென்யாவில்(Kenya) உள்ள மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளன.
உகாண்டா எதிர்க்கட்சித் தலைவர் போபி வைனை(Bobi Wine) ஆதரித்த ஒரு அரசியல் நிகழ்விற்குப் பிறகு, முகமூடி அணிந்த நபர்கள் பாப் ஜாகி(Bob Njagi) மற்றும் நிக்கோலஸ் ஓயூவை(Nicholas Oyoo) கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலயில், ஆர்வலர் அமைப்பான வோக்கல் ஆப்பிரிக்கா(Vocal Africa), இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உகாண்டாவின் புசியாவிலிருந்து(Busia) கென்ய தலைநகர் நைரோபிக்கு(Nairobi) அழைத்து செல்லப்பட்டதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.
வோக்கல் ஆப்பிரிக்கா, கென்யாவின் சட்ட சங்கம் மற்றும் அம்னஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில், கென்யா மற்றும் உகாண்டா அரசாங்கங்கள், ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும் குடிமக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.




