ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட ஆபத்தான கைதிகள் பலர் தலைமறைவு!

பிரித்தானியாவில் தவறுதலாக விடுவிக்கப்பட்ட பல கைதிகள் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதி ஒருவர் ஏறக்குறைய 19 மாதங்களாக தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் கடந்த மார்ச் 2025 முதல் தற்செயலாக  262 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய ஆண்டுகளை விட ஏராளமான கைதிகள் இந்த ஆண்டில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அண்மையில் இரு பாலியல் குற்றவாளிகள் மற்றும் ஒரு மோசடி குற்றவாளி சிறையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான சூழ்நிலை பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்களை அதிகரிப்பதாகவும், பிரித்தானியாவின் முக்கிய தெருக்களில் தற்போது கைதிகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதாகவும் கூறப்படுகிறது.

இது தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு  கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்கள் கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லை என விமர்சித்துள்ளனர்.

இதேவேளை கடுமையான சிறைசாலை சிக்கல்கள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைவதாக நீதித்துறை செயலாளர் டேவிட் லாமி குறிப்பிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!