பிரித்தானியாவில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்!
பிரித்தானியாவில் நேற்று கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பர்மிங்காமில் (Birmingham) உள்ள ஸ்மால்புரூக் குயின்ஸ்வே (Smallbrook Queensway) பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பெண் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் (West Midlands) காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அவசர சேவைகள் குழு மற்றும் காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.





