இலங்கை செய்தி

யாழில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் 21 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த பெண் ஒருவர், மூன்று குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதான யோகராசா மயூரதி என்ற தாயே நேற்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் ஏழாம் மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார்.

குழந்தைகளைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், அவர் இரண்டு நாட்கள் மட்டுமே கண் விழித்துப் பார்த்த நிலையில், ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையிலேயே காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

(Visited 3 times, 6 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!