பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிகாரிகள் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு
பங்களாதேஷ் மகளிர் அணியின் முன்னாள் தலைவி முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலரும், தற்போது பதவியில் இருப்பவர்களும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்கள் என்று முன்னாள் தலைவி ஜஹானாரா ஆலம் குற்றம் சுமத்தியிருந்தார்.
2022ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது, மகளிர் அணியின் முன்னாள் தேர்வாளர் ஒருவர் தன்னை தகாத முறையில் அணுகியதாகவும், ஆபாசமான கேள்விகளைக் கேட்டதாகவும் ஜஹானாரா ஆலம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க பங்களாதேஷ் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
இந்தக் குழு 15 வேலை நாட்களுக்குள் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.





