காலநிலை நெருக்கடி! விளைவுகள் உறுதி – வெப்பநிலை உச்சம் தொடும் என எச்சரிக்கை
உலகம் வெப்பமடைவதை 1.5 பாகை செல்சியஸால் மட்டுப்படுத்தத் தவறியமை தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) உலக நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரேஸிலின் பெலெம் நகரில் ‘COP-மாநாடு’ என்ற காலநிலை மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டார்.
2030ஆம் ஆண்டளவில் 1.5 பாகை செல்சியஸ் என்ற மட்டத்தைத் தாண்டி உலகம் வெப்பமடையலாம் என விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“இதன்மூலம், மாற்ற முடியாத விளைவுகளுடன் உலகின் வெப்பநிலை தீவிரமாக அதிகரிக்கலாம். உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தத் தவறுவது தார்மீக தோல்வி மற்றும் அலட்சியத்திற்குச் சமம்.
அறிவியல் தகவல்படி, 2030ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்தே உலகம் 1.5 பாகை செல்சியஸ் வரம்பைத் தாண்டி தற்காலிகமாக உயர்வடைவது தவிர்க்க முடியாதது.
1.5 பாகை வரம்பு என்பது மனிதகுலத்திற்கான சிவப்பு கோடாகும். கடல் மட்ட உயர்வு, ஆர்க்டிக் பனி உருகுதல், வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் உணவு அமைப்புகளையும் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது.
இந்த நிலையில், அரசியல் தைரியம் மட்டுமே காலநிலை நெருக்கடியைத் தீர்க்கவில்லை ” என குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.





