பொழுதுபோக்கு

பேராதரவைப் பெற்ற “ஹார்ட் பீட் – 2” நிறைவு பெற்றது… கிளைமேக்ஸில் நடந்த டுவிஸ்ட்!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற பிரபலமான வெப் சீரிஸ் தொடர்களில் ஒன்று ‘ஹார்ட் பீட்’.

முதல் சீசனுக்கு கிடைத்த வெற்றியும், அதரவும் இரண்டாவது சீசன் உருவாக காரணமாக இருந்தது.

இந்த நிலையில், ஹார்ட் பீட் – 2 இணையத் தொடர் 100 எபிசோடுகளுடன் இன்று நிறைவடைந்துள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கி டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்த இந்த தொடரில், நடிகை அனுமோள் ரதியாக சிறப்பாக நடித்திருந்தார்.

விஜய்யாக கார்த்திக் குமார் தனது நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டு விட்டார். இவருடைய யதார்த்தமான நடிப்பு அனைவரையும், இப்படி ஒரு நடிகரை வெள்ளித்திரை ஏன் கண்டுகொள்ளவில்லை? இந்த மனுசன் என்ன இப்படி நடிக்குறார் என்றெல்லாம் ஏக்கத்தை கொட்டுகின்றனர் சீரிஸ் பிரியர்கள்.

அடுத்ததாக ஹீரோயின் ரீனாவாக தீபா பாலு மனதை வருடிவிட்டார். கோபம், கவலை, ஏக்கம், காமெடி, பாசம், நட்பு என அனைத்திலும் பட்டையை கிளப்பிவிட்டார்.

இது போக பாடினி குமார், யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்தனர்.

இத்தொடரில் 14 வயதில் கர்ப்பமான ரதி மகளான ரீனாவை குழந்தையாக இருக்கும்போது காப்பகத்தில் விட்டு விடுகிறார். பின்னர் வேறொருவரை ரதி திருமணம் செய்துகொள்கிறார்.

பின்னர் தன் மகள்தான் ரீனா என்ற உண்மையை ரதி அறிந்து கொள்கின்றார். இதனால் ரதியின் குடும்பம் பிரியும் நிலைக்கு செல்கின்றது.

இதனிடையே, திடீர் திருப்பமாக ரீனாவின் தந்தை விஜய் இரண்டாம் பாதியில் கதைக்குள் வருகிறார். விஜய்தான் ரீன்வின் தந்தை என்பதை அர்ஜூன் அறிகின்றார்.

இந்த உண்மை தந்தைக்கும், மகளுக்கும் தெரியவிடாமல் வைத்திருக்கின்றார்கள்.

இறுதியாக விஜய்தான் உன்னுடைய தந்தை என ரதி, ரீனாவிடம் கூறிவிடுகிறார். இதையடுத்து ரீனாவுக்கு திடீர் விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய விஜய்தான் சரியான தேர்வு என அனைவரும் கூறும்போது, விஜய் மீதான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், மருத்துவராக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்தச் சூழலில்தான் ரீனாதான் தனது மகள் என்ற உண்மை, விஜய்யிக்கு தெரிய வருகிறது. இருந்தாலும் விஜய் தனது மகளான ரீனாவைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு, அறுவைச் சிகிச்சை மூலம் ரீனாவைக் காப்பாற்றி விடுகிறார்.

ரீனாவுக்கு சுயநினைவு திரும்பியதும் அனைவரும் மகிழ்ச்சியடைகிறார்கள். ரீனாவும் தனது தந்தையான விஜய்யை முதல்முறையாக அப்பா என்று அழைத்து பெருமிதம் கொள்கிறார்.

இந்தச் சூழலில்தான், விஜய், ரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்தது காவல் துறையினருக்கு தெரியவர, காவல் துறையினர் விஜய்யை கைது செய்கிறது. இதோடு ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகம் நிறைவு பெறுகிறது.

மக்களின் ஏகோபித்த வரவேற்பால் இனி ஹார்ட் பீட் மூன்றாம் பாகம் தொடரும் என்று முடித்து இருக்கின்றார்கள். முன்றாம் பாகம் 2026 மே மாதம் ஒளிபரப்பப்படும் என்று ஹார்ட் பீட் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 6 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!