ஜி20 மாநாட்டைப் புறக்கணித்தார் ட்ரம்ப் – தென்னாப்பிரிக்கா மீது குற்றச்சாட்டு
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்ததுடன், ஜி20 தலைமைப் பதவியில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மியாமியில் நடைபெற்ற அமெரிக்க வணிக மன்றத்தில் (American Business Forum) பேசிய ட்ரம்ப் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சுழற்சி முறையில் தற்போது ஜி20 தலைமைப் பதவி வகிக்கும் தென்னாப்பிரிக்கா, அந்தக் குழுவின் உறுப்பினராகக் கூட இருக்கத் தகுதியற்றது என விமர்சித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டிய ட்ரம்ப், இது தொடர்பாக பலமுறை விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து தப்பி வரும் வெள்ளையர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.





