மீட்புப் பணியின் போது விபத்துக்குள்ளான பிலிப்பைன்ஸ் விமானப்படை ஹெலிகாப்டர்
பிலிப்பைன்ஸின்(Philippines) தெற்கில் ஐந்து பணியாளர்களுடன் சென்ற விமானப்படை ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிலிப்பைன்ஸை தாக்கிய கல்மேகி(Kalmaegi) புயலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையின் போது தெற்கு அகுசன் டெல் சுர்(Agusan del Sur) மாகாணத்தில் உள்ள லோரெட்டோ(Loreto) நகருக்கு அருகே சூப்பர் ஹூய்(Super Huey) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், விமானப்படை வீரர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஐந்து விமானப்படை வீரர்களின் நிலை மற்றும் விபத்துக்கு என்ன காரணம் என்பது உட்பட விபத்து பற்றிய பிற விவரங்களை இராணுவ அதிகாரிகள் வெளியிடவில்லை,
கல்மேகி புயலால் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் 387,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொதுச் செயலாளர் க்வென்டோலின் பாங்(Gwendolyn Pang) குறிப்பிட்டுள்ளார்.





