நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!
இலங்கையின் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சரித ரத்வத்தே (Charitha Ratwatte) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை சுமார் 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் தொடர்புடைய வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராகவும், நிதி அமைச்சின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றிய ரத்வத்தே, 2015 ஆம் ஆண்டில் ஐந்து தற்காலிக சேமிப்புக் கிடங்குகளை பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரசாங்கத்திற்கு 90 மில்லியன் ரூபாய்க்கு மேல் நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





