அக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை
அக்டோபர் மாதத்தில் மொத்தம் 165,193 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
இது 2024ம் ஆண்டு அக்டோபர் மாத வருகை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பு ஆகும்.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மாதம் இந்தியாவில்(India) இருந்து 29.1% அதாவது 48,113 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மேலும், பிரித்தானியாவிலிருந்து(UK) 12,934 பேர், ரஷ்யாவிலிருந்து(Russia) 11,496 பேர், சீனாவிலிருந்து(China) 10,864 பேர் மற்றும் 9,753 ஜெர்மன்(Germany) நாட்டவர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், 2025ம் ஆண்டில் இலங்கை வந்த மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,890,687 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில், 423,405 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 174,827 பேர் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள், 133,640 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 116,741 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.





