ஆஸ்திரேலியாவில் காய்ச்சல் மரணங்கள் அதிகரிப்பு – கொவிட்டை விட அதிக உயிரிழப்புகள்
ஆஸ்திரேலியாவில் இன்ப்ளூயன்ஸா (காய்ச்சல்) மரணங்கள் தற்போது கொவிட் மரணங்களை விட அதிகமாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தடுப்பூசி போடாததாலும், வைரஸைக் கவனிக்காததாலும் இந்த அளவு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவில் இன்ப்ளூயன்ஸாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 265 ஆக இருந்தது.
அதே நேரத்தில் கொவிட் தொடர்பான மரணங்கள் 195 மட்டுமே பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு 410,000 இன்ப்ளூயன்ஸா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பதிவுகளும் காட்டுகின்றன.
இன்ப்ளூயன்ஸாவால் ஏற்படும் இறப்புகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமானவை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிகழ்கின்றன என்று Royal Australian College of Physicians தலைவர் மைக்கேல் ரைட் (Michael Wright) கூறினார்.
(Visited 10 times, 10 visits today)





