தேவையான ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு
இலங்கை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனுராதபுரம் ஸ்ரீ மகா விகாரை மற்றும் ருவன்வெளிசாய ஆகிய விகாரைகளில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது. அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால் ஆளும் தரப்பின் ஒருதரப்பினர் அதிருப்தியடைந்துள்ளார்கள் ? மஹிந்தவிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவ்வாறு இருப்பார்களாயின் அதுவும் நன்மைக்கே என குறிப்பி்டுள்ளார்.
எமது ஒத்துழைப்புடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்,அவ்வளவு தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊடகங்களுக்க பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலி மற்றும் ஒளிப்பரப்பு அதிகார சபை சட்டமூலம் கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? என மஹிந்தவிடம் கேட்கப்பட்ட போது அனுமதிபத்திரம் இரத்து செய்யப்படாத வகையில் ஊடகங்கள் பாதுகாக்காக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை எத்தன்மையில் காணப்படுகிறது என வினவிய போது, நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது.அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.