கனடாவில் காணாமல் போன இலங்கை சிறுவன்

கனடாவின் தெற்கு வின்னிபேர்க் பகுதியில் இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், அவர் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
15 வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்னர். கடந்த 24ஆம் திகதி முதவ் அவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புக்கு சென்று அங்கிருந்து வெளியேறிய பின்னரே அவரை காணவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இனுக குணதிலக்க கடைசியாக புதன்கிழமை (24.05.2023) காலை ஃபோர்ட் ரிச்மண்ட் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தகவல் தெரிந்தவர்கள் வின்னிபெக் பொலிஸின் காணாமல் போனோர் பிரிவை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)