இந்தியா செய்தி

வெற்றிகரமாக நடந்து முடிந்த டோனியின் முழங்கால் அறுவை சிகிச்சை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இந்த சீசனில் முதல் முறையாக 3 நாட்கள் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது.

அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது.

இந்த தொடரின் லீக் போட்டிகளில் டோனி விளையாடும் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

சில போட்டிகளில் கீப்பிங் செய்யும்போது அதை காண முடிந்தது. அந்த காயத்துடன் தற்காலிகமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் இறுதிப்போட்டி வரை அவர் வலியுடனே விளையாடினார்.

இதையடுத்து, முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக டோனி இன்று மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், எம்.எஸ்.டோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி