இலங்கை செய்தி

இலங்கை பாடசாலை மாணவர்களைப் பாதுகாக்க பிரதி காவல்துறை மா அதிபர் நடவடிக்கை

இலங்கையில் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பாடசாலை முடிந்த பின்னர் மாணவர்கள், யாருடன் பழகுகிறார்கள்?, எங்கு குழுவாக நிற்கிறார்கள் என்று ஆராய்வதற்கு சிவில் உடையில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நிலையங்கள், பாடசாலை விட்டுச் செல்லும்போது பேருந்து, வியாபாரத் தளங்கள் போன்ற இடங்களில் போதைப்பொருள் பாவனைப் போன்ற சம்பவங்களைக் கண்டால் அறிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

071 859 2683 என்ற தனது தொலைபேசி இலக்கத்துக்கு இது தொடர்பில் தகவல் வழங்குமாறு பிரதிப் காவல்துறை மா அதிபர் ஜயந்த பத்மினி வீரசூரிய பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

(Visited 2 times, 4 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை