ஸ்பெயினில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல்!
ஸ்பெயினில் (Spain) உள்ள அலிகாண்டே-எல்ச் ( Alicante-Elche) விமான நிலையத்தில் ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த விமான நிலையம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது ஒன்பது விமானங்கள் திருப்பி விடப்பட்டதாகவும், விமானங்கள் தரையிறங்குவது அனுமதிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லண்டன் (London), மென்செஸ்டர் (Manchester), நியூகேஸில் (Newcastle), டர்ஹாம் (Durham) மற்றும் பிராங்பேர்ட்டிற்கான (Frankfurt ) விமானங்கள் அனைத்தும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ட்ரோன்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக ஐரோப்பாவில் ட்ரோன்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)





