உலகம்

போர் பதற்றங்களை தொடர்ந்து மத்தியக்கிழக்கில் இடம்பெறும் தேர்தல்!

நாட்டின் போக்கை தீர்மானிக்கும் ஈராக்கின்  நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் மாத் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த தேர்தல் இடம்பெற இன்னும் சில நாட்களே உள்ளன.

மொத்தம் 7,768 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். அவர்களில் 2,248 பெண்கள் மற்றும் 5,520 ஆண்கள் உள்ளனர். இவர்கள்  329 நாடாளுமன்ற இடங்களுக்கு போட்டியிடுகின்றனர்.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு இடம்பெறும் இந்த தேர்தல் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

ஈராக்கின் அண்டை நாடாக ஈரான் காணப்படுகிறது. அந்த நாட்டுடன் அமெரிக்க பல வருடங்களாக முரண்பாடான நிலையை கொண்டுள்ளது.

குறிப்பாக ஈரானின் அணுதளங்கள் மீதான தாக்குதல்கள், அணுசெறிவூட்டல் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் என்பன இருநாட்டிற்கும் இடையிலான உறவை சீர்குலைத்துள்ளன.

இதற்கிடையில் ஈரானின் ஆயுதக்குழுக்கள்  ஈராக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே ஈராக் மற்றும் அமெரிக்காவிற்கு  இடையிலான உறவு எப்பொழுது வேண்டும் என்றாலும் சீர்குலையலாம் என்ற ஒரு நிலையே காணப்படுகிறது.

ஈரானுக்கு ஆதரவான கட்சிகளின் குழுவின் ஆதரவுடன் ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி  (Mohammed Shia al-Sudani)2022 இல் ஆட்சிக்கு வந்தார், ஆனால் அதன் பின்னர் தெஹ்ரான் (Tehran)மற்றும் வாஷிங்டனுடனான ஈராக்கின் உறவுகளை சமநிலைப்படுத்த முயன்று வருகிறார்.

நவம்பர் 11 ஆம் திகதி வாக்கெடுப்பு, அவருக்கு இரண்டாவது முறையாக பதவி கிடைக்குமா என்பதை தீர்மானிக்கும். இந்நிலையில் இந்த தேர்தல் அமெரிக்காவிற்கும், ஈராக்கிற்கும் இடையிலான உறவை சுமூகமாக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

(Visited 7 times, 7 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்