சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

ரஷ்யா -உக்ரைன் போரில் மொஸ்கோ மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக எண்ணெய் விலையானது இன்று 3.4 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.
இதற்கமைய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் இப்போது 64.73 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
போர் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், சமாதான ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவும் ட்ரம்ப் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft ) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு பொருளாதார தடைகளை விதிக்க ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே விலைகள் அதிகரித்துள்ளன.
(Visited 3 times, 3 visits today)