‘ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன்’ – பொலிஸ் அமைச்சரை மிரட்டிய எம்.பி.!

” என்னை கொலை செய்தால் ஆவியாக வந்தேனும் பழிவாங்குவேன் என்பதை புரிந்துகொள்ளுங்கள் காவல் துறைக்கு பொறுப்பனா அமைச்சரே….”
இவ்வாறு பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க(Chamara Sampath Dassanayake) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே சாமர சம்பத் தஸநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார். தனது உரையின்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சாமர எம்.பி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
” அமைச்சரே, எம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. முடிந்தால் எம்மை கொல்லுங்கள். ஆவியாக வந்தேனும் பழிதீர்ப்பேன். எனது பாதுகாப்பும் நீக்கப்பட்டுள்ளது. என்னை கொல்வதற்குதான் பார்க்கின்றீர்கள். கொலை செய்தாலும் உங்களுக்கு பின்னால்தான் நிற்பேன்.” எனவும் சாமர சம்பத் தஸநாயக்க எம்.பி. குறிப்பிட்டார்.
(Visited 7 times, 7 visits today)