அமெரிக்காவில் மீண்டும் வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல்

அமெரிக்காவில் மீண்டும் பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பல பண்ணைகளில் ஏற்பட்ட கிருமிப்பரவலால் 7 மில்லியனுக்கும் அதிகமான பண்ணைப் பறவைகள் உயிரிழந்தன.
உயிரிழந்த பறவைகளில் 1.3 மில்லியன் வான்கோழிகள் ஆகும். அடுத்த மாதம் இறுதியில் தேங்ஸ்கிவ்விங் (Thanksgiving) வருவதால் அமெரிக்காவில் வான்கோழிகளுக்குப் பெரிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐடஹோ, நெப்ராஸ்கா, டெக்ஸஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள மாட்டுப் பண்ணைகளிலும் கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாகக் கோடைக்காலம் முடிந்த பிறகு பறவைகள் தெற்கு நோக்கிப் பறந்து செல்லும். அப்போது கிருமிப்பரவல் ஏற்படலாம்.
தற்போது அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளதால் பிரச்சினை பெரிய அளவில் வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மனிதர்கள் யாரேனும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை நோய்த் தடுப்பு அமைப்பு கவனித்து வருகிறது.