துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் மரணம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது இன்று மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை துப்பாக்கித்தாரி மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
(Visited 7 times, 8 visits today)